நினது திருவடி (விநாயகர்) – திருப்புகழ் 4

நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் – நிகழ்பால் தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் – இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை – வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை – மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் – செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் – செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிம்எ னத்தவில் – எழும் ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : விடமடைசு வேலை (விநாயகர்) – திருப்புகழ் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *