
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 128வது தொகுதியாக ஒட்டன்சத்திரம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1971 | நா. நாச்சிமுத்து கவுண்டர் | திமுக | 40,845 |
1977 | ஏ. பி. பழனியப்பன்
|
இந்திய தேசிய காங்கிரசு | 27,000 |
1980 | கே. குப்புசாமி | அதிமுக | 35,269 |
1984 | கே. குப்புசாமி | அதிமுக | 46,566 |
1989 | பி. காளியப்பன் | திமுக | 38,540 |
1991 | ஏ. டி. செல்லமுத்து | அதிமுக | 72,669 |
1996 | அர. சக்கரபாணி | திமுக | 66,379 |
2001 | அர. சக்கரபாணி | திமுக | 52,896 |
2006 | அர. சக்கரபாணி | திமுக | 63,811 |
2011 | அர. சக்கரபாணி | திமுக | 87,743 |
2016 | அர. சக்கரபாணி | திமுக | 1,21,715 |
2021 | அர. சக்கரபாணி | திமுக | 1,09,970 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,15,490 | 1,22,743 | 9 | 2,38,242 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஒட்டன்சத்திரம் தாலுக்கா
- பழனி தாலுக்கா (பகுதி)
வேம்பன்வலசு, மேலகோட்டை, அமரபூண்டி,ஏரமநாயக்கன்பட்டி, கனக்கம்பட்டி,மரிச்சிலம்பு, தும்பலப்பட்டி, புதூர், அக்கைரைபாடி, மேட்டுபட்டி, வேலம்பட்டி, தொப்பம்பட்டி, வாகரை, மானூர், வில்வாதம்பட்டி, புளியம்பட்டி, மொள்ளம்பட்டி, கோட்டத்துரை, மேலக்கரைபட்டி, ராஜம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுப்பட்டி, மிடப்பாடி, புஷ்பத்தூர், குழும்மகொண்டான், கோவிலம்மாபட்டி, கோரிகடவு மற்றும் தாழையூத்து, கிராமங்கள், கீரனூர் (பேரூராட்சி).
ஆத்தூர் – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி