
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை – யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் – மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு – மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது – தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு – மலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத – மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி – புதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கச்சணி இளமுலை (திருத்தணிகை) – திருப்புகழ் 253