ஒருவரை ஒருவர் (பழனி) – திருப்புகழ் 124

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத – பொறியாளர்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ – ரதுபோய்பின்

வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல – மதுவாக

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத – மருள்வாயே

திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான – குருநாதன்

திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத – னருள்பாலா

சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான – அயிலோனே

சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஓடி ஓடி (பழனி) – திருப்புகழ் 125

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *