ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 217வது தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1967 மு. முத்தையா சுதந்திரா கட்சி 25,937
1971 மு. முத்தையா பார்வார்டு ப்ளாக் 27,571
1977 ஓ. சோ. வேலுச்சாமி இந்திய தேசிய காங்கிரசு 22,629
1980 எம். அப்பாதுரை இபொக 33,071
1984 ஆர். எஸ். ஆறுமுகம் இந்திய தேசிய காங்கிரசு 46,190
1989 மு. முத்தையா திமுக 25,467
1991 எஸ். எக்ஸ். இராஜமன்னார் அதிமுக 52,360
1996 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 24,585
2001 ஏ. சிவபெருமாள் அதிமுக 39,350
2006 பி. மோகன் அதிமுக 38,715
2011 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 71,330
2016 ஆர். சுந்தர்ராஜ் அதிமுக 65,071
2019

(இடைத்தேர்தல்)

செ. சண்முகையா திமுக 73,241
2021 செ. சண்முகையா திமுக 73,110

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,19,562 1,24,966 48 2,44,576

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)

மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்.

தூத்துக்குடி தாலுக்கா (பகுதி)

உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள்.

மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்).

ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அனவரதநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (காஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றும் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *