பாதி மதிநதி (சுவாமிமலை) – திருப்புகழ் 228

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய – குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய – மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு – மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட – அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு – சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு – மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி – லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : மகர கேதனத்தன் (சுவாமிமலை) – திருப்புகழ் 229

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *