
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் – டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் – சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் – தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் – திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் – கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் – கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் – சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பருத்தபற் சிரத்தினை (திருத்தணிகை) – திருப்புகழ் 280