
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 57வது தொகுதியாக பாலக்கோடு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | கே. முருகேசன் | இந்தியத் தேசிய காங்கிரசு | 29,186 |
1971 | மா. வெ. கரிவேங்கடம் | திமுக | 32,378 |
1977 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 21,959 |
1980 | எம். பி. முனிசாமி | அதிமுக | 38,999 |
1984 | பி. தீர்த்தராமன் | இந்தியத் தேசிய காங்கிரசு | 55,459 |
1989 | கே. மாதப்பன் | அதிமுக | 37,168 |
1991 | எம். ஜி. சேகர் | அதிமுக | 63,170 |
1996 | ஜி. எல். வெங்கடாச்சலம் | திமுக | 56,917 |
2001 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 75,284 |
2006 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 66,711 |
2011 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 94,877 |
2016 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 76,143 |
2021 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 1,10,070 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,18,950 | 1,16,541 | 17 | 2,35,508 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பாலக்கோடு வட்டம் (பகுதி)
பஞ்சப்பள்ளி, பெரியானூர், நாமண்டஹள்ளி, சின்னகவுண்டனஹள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, தெம்மாராயனஹள்ளி, முறுக்கல்நத்தம், பிக்கனஹள்ளி, கருக்கனஹள்ளி, வெலகலஹள்ளி, ஜக்கசமுத்திரம், கித்தனஹள்ளி, சிக்கடொர்ணபெட்டம், சாமனூர், போடிகுத்தலப்பள்ளி, அதிமுட்லு, கெண்டனஹள்ளி, மாரண்டஹள்ளி, சென்னமேனஹள்ளி, சிக்கமரந்தஹள்ளி, செங்கபசுவந்தலர், பி.செட்டிகல்லி, தண்டுகாரனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, ஹனுமந்தபுரம், எலுமிச்சனஹள்ளி, முக்குளம், கும்பரஹள்ளி, பச்சிகனப்பள்ளி, கெரகோடஹள்ளி, காரிமங்கலம், பொம்மஹள்ளி, நரியனஹள்ளி, புலிக்கல், கொண்டச்சமனஹள்ளி, சிக்கர்தனஹள்ளி, ஜெர்டலார், கரகடஹள்ளி, பாலக்கோடு, போலபாகுதனஹள்ளி, கோட்டுமாறனஹள்ளி, நாகனம்பட்டி, பெரியனஹள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஹள்ளி, பண்டாரஹள்ளி, முருக்கம்பட்டி, இந்தமங்கலம், மொளப்பனஹள்ளி, பூனத்தனஹள்ளி, சென்நாராயணஹள்ளி, தொன்னஹள்ளி, பைசுஹள்ளி, கனவேனஹள்ளி, நல்லூர், புடிஹள்ளி, பெலமரனஹள்ளி, திருமால்வாடி, பெவுஹள்ளி, சிரேனஹள்ளி, எர்ரகுட்டஹள்ளி, பொப்பிடி, எருடுகுட்டஹள்ளி, எர்ரணஹள்ளி, குஜ்ஜரஹள்ளி, உப்பரஹள்ளி, ரெங்கம்பட்டி மற்றும் சீரந்தபுரம் கிராமங்கள்.
மாரண்டஹள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி).