
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்தரம் முருகப் பெருமானுக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் விரதம் இருந்து சிவனை கல்யாண சுந்தரமூர்த்தியாக வணங்குவது வழக்கம். நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பவர்கள் சிவன்-பார்வதியை வேண்டி இந்நாளில் விரதம் இருப்பார்கள். முருகனை வேண்டியும் விரதம் இருக்கலாம்.
பங்குனி உத்திரம் 2025

2025-ம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வருகிறது. உத்திர நட்சத்திரம் ஏப்ரல் 10-ஆம் தேதி மதியம் 2.07 மணியில் தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 4.11 மணிக்கு முடிவடைகிறது.
பௌர்ணமி ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 4.13 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 6.03 மணி வரை இருக்கும். பங்குனி உத்திரம் நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள். அதனால் உத்திர நட்சத்திரம் உள்ள ஏப்ரல் 11-ஆம் தேதி விரதம் இருக்க வேண்டும்.
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடுகிறோம்?
பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழாவாகும். இது முருகப்பெருமானின் திருமணத்தை குறிக்கும் விழாவாகும். முருகன் தெய்வாணை, வள்ளி ஆகியோரை திருமணம் செய்து கொண்ட நாள் இதுவாகும். பங்குனி உத்திர நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். முருகனுக்கு காவடி எடுப்பதால் பாவங்கள் நீங்கும். திருமண தடைகள் நீங்க, குடும்ப நல்வாழ்வுக்காக வேண்டுதல் செய்யும் நாளாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாம் : கந்தகுரு கவசம் பாடல் வரிகள்..!
பங்குனி உத்திரம் விரத முறை
சிலருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே இருக்கும். இப்படி திருமணத்தடை இருப்பவர்கள் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து, கடவுளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும். மனதிற்குப் பிடித்தவரை மணந்து கொள்வதற்கு பங்குனி உத்திர விரதம் இருப்பது சிறப்பான பலனாக அமையும். பல தெய்வங்களின் திருமணமும் இந்த நாளில் தான் நடந்தது.
பங்குனி உத்திரத்தன்று காலையில் எழுந்து, குளித்து, வீட்டில் விளக்கு ஏற்றி முருகனை வணங்க வேண்டும். அன்று முழு நாளும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் ஆகியவற்றை படிக்கலாம்.
வேலைக்கு செல்பவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம். இப்படி செய்தால் நம் மனம் கடவுளை நினைத்தபடியே இருக்கும். அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்கலாம்.
பங்குனி உத்திரம் 2025 பலன்கள்
பங்குனி உத்திர நாளில் திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டால் அவர்களுக்கும் திருமணம் நடக்கும். அதேபோல, திருமழப்பாடி கோயிலில் நந்தியின் திருமணத்தைப் பார்த்தால், விரைவில் திருமணம் நடந்துவிடும்.
கடவுளை வழிபடும் போது, நல்ல மனதோடும், தூய்மையான எண்ணத்தோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், கடவுளின் அருளும் நல்ல பலன்களும் கிடைக்கும்.
பங்குனி உத்திரம் நாளில் திருமணம் செய்யும் மணமக்களுக்கும், திருமணம் ஆனவர்களும், பிரிந்து இருப்பவர்களும் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்வதால் புனித உணர்வோடு இணைவதற்கும் வாழ்க்கையின் நிலைகளைப் தெரிந்து கொள்ளவும் உதவும்.
பங்குனி உத்திரம் அன்று திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் நல்ல வளமும், சந்தோஷமும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால், ஒருவரின் 48 ஆண்டு பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து ஒரு நபரை விடுவிக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நாளில், பக்தர்கள் கடவுளின் அருளைப் பெறவும், குடும்ப உறவுகள் நல்ல படியாக இருக்கவும் வழிபாடு செய்து, வேண்டுதல் வைத்து, பல்வேறு சமய செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 11-ல் வருகிறது. அன்று எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். முருகன்-வள்ளி-தெய்வானை திருமணம், மதுரையில் கள்ளழகர் திருமணம், திருப்பரங்குன்றத்தில் தங்கக் குதிரை ஊர்வலம், வில்லிபுத்தூர், மோகூர் ஆகிய இடங்களில் பெருமாள் திருமணம் நடைபெறும்.
இதையும் படிக்கலாம் : முருகனின் 16 வகை கோலங்கள்