
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 60வது தொகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | பெ. பழனியப்பன் | அதிமுக | 76,582 |
2016 | பெ. பழனியப்பன் | அதிமுக | 74,234 |
2019 | ( இடைத்தேர்தல் )
ஆ. கோவிந்தசாமி |
அதிமுக | 1,00,947 |
2021 | ஆ. கோவிந்தசாமி | அதிமுக | 1,14,507 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,28,362 | 1,27,603 | 13 | 2,55,978 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தர்மபுரி வட்டம் (பகுதி)
கே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிக்கரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் (பகுதி)
மணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசவபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைப்பட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மோளையானூர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கனூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.
கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).