/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ துன்பம் போக்கும் பராசக்தி பாடல் - Thagaval Kalam

துன்பம் போக்கும் பராசக்தி பாடல்

பராசக்தி பாடலை பெண்கள் தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பாடி வந்தால் துன்பம் படிப்படியாக அகலும்.

துன்பம் போக்கும் பராசக்தி பாடல்

 

அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி

ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி

இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி

ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி

உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி

ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி

எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி

ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி

ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே உருவாய் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதிபராசக்தி

அன்னை பராசக்தி ஜெய ஆதி பராசக்தி

அன்னை ஆதிபராசக்தி ஜெய ஆதிபராசக்தி

 

இதையும் படிக்கலாம் : அனைத்து தெய்வங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *