
பரவரி தாகிய வரையென நீடிய
பணைமுலை மீதினி – லுருவான
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி – அயிலாலே
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
நிரைதரு மூரலி – னகைமீது
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
நிலையெழ வேயலை – வதுவாமோ
அரவணை யார்குழை பரசிவ ஆரண
அரனிட பாகம – துறைசோதி
அமையுமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள் – புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிக
குககரு ணாநிதி – அமரேசா
குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பலகாதல் பெற்றிட (சுவாமிமலை) – திருப்புகழ் 227