/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ மிளகுத்தூளின் ஆரோக்கிய நன்மைகள்..! - Thagavalkalam

மிளகுத்தூளின் ஆரோக்கிய நன்மைகள்..!

நமது முன்னோர்கள் மிளகாய் என்பது யாதென அறியாதவர்கள். ஏனெனில், அவர்கள் சமையல், மருத்துவம் என அனைத்திலும் மிளகை சேர்த்து நன்மை அடைந்து வந்தார்கள். மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் அறிந்து வருகிறார்கள்.

செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது மிளகு.

செரிமானம்

வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.

தும்மல், சளி

மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும்.

கபம்

மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும்.

பல்வலி

தொண்டைக் கட்டு, பல் வலி போன்றப் பிரச்சனை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்பளித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

ஈரல் நோய்

ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்பாடிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து கொண்டு, காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

பொடுகு

பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும் மற்றும் தலை முடி நன்கு வளரும்.

இதையும் படிக்கலாம் : பொடுகு தொல்லை நீங்க, இந்த பொருளை ட்ரை பண்ணி பாருங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *