
பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 147வது தொகுதியாக பெரம்பலூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | பரமசிவம் | சுயேச்சை | 25,411 |
1957 | கே. பெரியண்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 20,375 |
1962 | து. ப. அழகமுத்து | திமுக | 38,686 |
1967 | ஜே. எஸ். ராஜு | திமுக | 33,657 |
1971 | ஜே. எஸ். ராஜு | திமுக | 39,043 |
1977 | எசு. வி. இராமசாமி | அதிமுக | 37,400 |
1980 | ஜே. எஸ். ராஜு | திமுக | 28,680 |
1984 | கே. நல்லமுத்து | இந்திய தேசிய காங்கிரசு | 57,021 |
1989 | ஆர். பிச்சைமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34,829 |
1991 | டி. செழியன் | அதிமுக | 76,202 |
1996 | எம். தேவராஜன் | திமுக | 64,918 |
2001 | பி. இராசரத்தினம் | அதிமுக | 67,074 |
2006 | எம். இராஜ்குமார் | திமுக | 60,478 |
2011 | இரா. தமிழ்செல்வன் | அதிமுக | – |
2016 | இரா. தமிழ்செல்வன் | அதிமுக | 1,01,073 |
2021 | ம. பிரபாகரன் | திமுக | 1,21,882 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,44,633 | 1,52,655 | 6 | 2,97,294 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வேப்பந்தட்டை வட்டம்
- பெரம்பலூர் வட்டம்
- குன்னம் வட்டம் (பகுதி)
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.