
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 12வது தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. இத்தொகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
பெரம்பூர் தொகுதியில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மேலும் நாடார், தேவர், நாயுடு, உடையார் மற்றும் பிறரும் குறிப்பிடும் அளவில் உள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | எஸ். பாலன் | திமுக | 34,134 |
1980 | பாலன் | திமுக | 49,269 |
1984 | பரிதி இளம்வழுதி | திமுக | 53,325 |
1989 | செங்கை சிவம் | திமுக | 65,681 |
1991 | எம். பி. சேகர் | அதிமுக | 62,759 |
1996 | செங்கை சிவம் | திமுக | 90,683 |
2001 | கே. மகேந்திரன் | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 69,613 |
2006 | கே.மகேந்திரன் | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 81,765 |
2011 | சௌந்தரராஜன் | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 84,668 |
2016 | பி. வெற்றிவேல் | அதிமுக | 79,974 |
இடைத்தேர்தல் 2019 | ஆர். டி. சேகர் | திமுக | 1,06,394 |
2021 | ஆர். டி. சேகர் | திமுக | 1,05,267 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,45,290 | 1,49,999 | 70 | 2,95,359 |