பேராவூரணி சட்டமன்றத் தொகுதி

பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 177வது தொகுதியாக பேராவூரணி தொகுதி உள்ளது. இத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 குழ. செல்லையா சுயேச்சை
1977 எம். ஆர். கோவிந்தன் அதிமுக 32,625
1980 எம். ஆர். கோவிந்தன் அதிமுக 56,010
1984 எம். ஆர். கோவிந்தன் அதிமுக 52,690
1989 ஆர். சிங்காரம் இந்திய தேசிய காங்கிரசு 33,467
1991 ஆர். சிங்காரம் இந்திய தேசிய காங்கிரசு 77,504
1996 எஸ். வி. திருஞான சம்பந்தம் தமாகா 70,112
2001 எஸ். வி. திருஞான சம்பந்தம் தமாகா 64,076
2006 எம். வி. ஆர். கபிலன் அதிமுக 54,183
2011 சி. அருண் பாண்டியன் தேமுதிக 51,010
2016 மா. கோவிந்தராசு அதிமுக 73,908
2021 நா. அசோக்குமார் திமுக 89,130

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,07,132 1,10,905 8 2,18,045

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பேராவூரணி வட்டத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பேராவூரணி மற்றும் பெருமகளூர் பேரூராட்சிகள்.

ஒரத்தநாடு வட்டத்தின் பகுதிகளான தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள்.

பட்டுக்கோட்டை வட்டத்தின் பகுதிகளான நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்டாத்தி ஊராட்சி.

கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *