
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 125வது தொகுதியாக பொள்ளாச்சி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | நா. மகாலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 35,148 |
1957 | நா. மகாலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 5,20,763 |
1962 | நா. மகாலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 38,929 |
1967 | ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் | திமுக | 37,480 |
1971 | ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் | திமுக | 41,654 |
1977 | ஓ.பி. சோமசுந்தரம் | அதிமுக | 34,896 |
1980 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 52,833 |
1984 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 54,337 |
1989 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக | 41,749 |
1991 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக | 72,736 |
1996 | எஸ். ராஜு | திமுக | 58,709 |
2001 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 64,648 |
2006 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 62,455 |
2011 | எம். கே. முத்துகருப்பண்ணசாமி | அதிமுக | 81,446 |
2016 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 78,553 |
2021 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 80,567 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,06,178 | 1,15,551 | 42 | 2,21,771 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பொள்ளாச்சி வட்டம் (பகுதி), பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள்.
பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).