போளூர் சட்டமன்றத் தொகுதி

போளூர் சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 66வது தொகுதியாக போளூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 மாணிக்கவேல் நாயக்கர் பொது நல கட்சி 19,508
1957 எசு. எம். அண்ணாமலை சுயேச்சை 17,222
1962 கேசவ ரெட்டியார் திமுக 29,283
1967 எசு. குப்பம்மாள் திமுக 33,292
1971 தொ. ப. சீனிவாசன் திமுக 34,728
1977 கே. ஜே. சுப்பிரமணியன் அதிமுக 24,631
1980 எல். பலராமன் இந்தியத் தேசிய காங்கிரசு 35,456
1984 ஜெ. இராசாபாபு இந்தியத் தேசிய காங்கிரசு 52,437
1989 ஏ. ராஜேந்திரன் திமுக 31,478
1991 டி. வேதியப்பன் அதிமுக 60,262
1996 ஏ. ராஜேந்திரன் திமுக 59,070
2001 நளினி மனோகரன் அதிமுக 59,678
2006 பி. எசு. விஜயகுமார் இந்தியத் தேசிய காங்கிரசு 58,595
2011 எல். ஜெயசுதா அதிமுக 92,391
2016 கே. வி. சேகரன் திமுக 66,558
2021 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 97,732

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,457 1,22,845 8 2,41,310

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.

சேத்துப்பட்டு வட்டம் (பகுதி)

மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.

போளூர் வட்டம் (பகுதி)

துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிகுப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், ­களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள்.

போளூர் (பேருராட்சி) சேத்துப்பட்டு பேரூராட்சி, களம்பூர் பேரூராட்சி.

ஆரணி சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *