பொரியப் பொரிய (திருத்தணிகை) – திருப்புகழ் 285 

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் – தனமீதே

புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் – கொடிவேள்தோள்

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் – பழியாதே

செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் – தரவேணும்

சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் – புரிவோனே

சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் – பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் – தொடும்வீரா

தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பொருவிக் கந்தொடு (திருத்தணிகை) – திருப்புகழ் 286 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *