பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 17

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் – வஞ்சமாதர்

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் – தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் – அன்புமேவும்

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் – அன்புறாதோ

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு – கந்தவேளே

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் – அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் – துன்றிநீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை – தம்பிரானே.

இதையும் படிக்கலாம் : மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *