
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 180வது தொகுதியாக புதுக்கோட்டை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | பாலகிருசுணன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 22,954 |
1962 | அ. தியாகராசன் | திமுக | 37,563 |
1967 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | இந்திய தேசிய காங்கிரசு | 45,342 |
1971 | எம். சத்தியமூர்த்தி | நிறுவன காங்கிரசு | 34,680 |
1977 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | இந்திய தேசிய காங்கிரசு | 36,406 |
1980 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | இந்திய தேசிய காங்கிரசு | 47,660 |
1984 | ஜெ. முஹம்மது கனி | இந்திய தேசிய காங்கிரசு | 63,877 |
1989 | ஏ. பெரியண்ணன் | திமுக | 45,534 |
1991 | சி. சுவாமிநாதன் | இந்திய தேசிய காங்கிரசு | 82,205 |
1996 | ஏ. பெரியண்ணன் | திமுக | 79,205 |
2001 | சி. விஜயபாஸ்கர் | அதிமுக | 77,627 |
2006 | நெடுஞ்செழியன் | அதிமுக | 64,319 |
2011 | எஸ். பி. முத்துக்குமரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 65,466 |
2012
(இடைத்தேர்தல்) |
வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் | அதிமுக | 1,01,998 |
2016 | ஏ. பெரியண்ணன் | திமுக | 66,739 |
2021 | வை. முத்துராஜா | திமுக | 85,802 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,17,319 | 1,22,563 | 21 | 2,39,903 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- புதுக்கோட்டை வட்டம்
- ஆலங்குடி வட்டம் (பகுதி)
பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.