
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 202வது தொகுதியாக இராஜபாளையம் தொகுதி உள்ளது. இத் தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1962 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | ஏ. அ. சுப்பராஜா | சுயேட்சை | – |
1971 | க. சுப்பு | இந்திய பொதுவுடமைக் கட்சி | – |
1977 | கே. தனுஷ்கோடி | அதிமுக | 28,028 |
1980 | பி. மூக்கையன் | சுயேச்சை | 38,339 |
1984 | கே. இராமன் | இந்திய தேசிய காங்கிரசு | 54,670 |
1989 | வி .பி. இராஜன் | திமுக | 49,137 |
1991 | தி. சாத்தையா | அதிமுக | 68,657 |
1996 | வி .பி. இராஜன் | திமுக | 49,984 |
2001 | எம். இராஜசேகர் | அதிமுக | 61,740 |
2006 | மு. சந்திரா | அதிமுக | 58,320 |
2011 | க. கோபால்சாமி | அதிமுக | 80,125 |
2016 | ச. தங்கபாண்டியன் | திமுக | 74,787 |
2021 | ச. தங்கபாண்டியன் | திமுக | 74,158 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,399 | 1,15,383 | 33 | 2,25,815 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இராஜபாளையம் தாலுக்கா (பகுதி)
வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள்.
இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி), தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி).
திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி