
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 41வது தொகுதியாக இராணிப்பேட்டை தொகுதி உள்ளது. இத் தொகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | எசு. காதர் செரிப் | இந்திய தேசிய காங்கிரஸ் | 17,934 |
1957 | சந்திரசேகர நாயக்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | 12,386 |
1962 | அப்துல் கலீல் | திமுக | 24,082 |
1967 | அப்துல் கபூர் சாகிப் | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் | 30,011 |
1971 | கே. ஏ. வகாப் | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் | 36,357 |
1977 | துரைமுருகன் | திமுக | 31,940 |
1980 | துரைமுருகன் | திமுக | 44,318 |
1984 | எம். கதிர்வேலு | இந்திய தேசிய காங்கிரஸ் | 56,068 |
1989 | வாலாஜா ஜெ. அசன் | சுயேச்சை | 27,724 |
1991 | என். ஜி. வேணுகோபால் | அதிமுக | 65,204 |
1996 | ஆர். காந்தி | திமுக | 71,346 |
2001 | எம். எசு. சந்திரசேகரன் | அதிமுக | 83,250 |
2006 | ஆர். காந்தி | திமுக | 92,584 |
2011 | ஏ. முகம்மது ஜான் | அதிமுக | 83,834 |
2016 | ஆர். காந்தி | திமுக | 81,724 |
2021 | ஆர். காந்தி | திமுக | 1,03,291 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,783 | 1,34,470 | 22 | 2,60,275 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆற்காடு வட்டம் (பகுதி)
ஆற்காடு (நகராட்சி) 10-24 வார்டுகள் விஷாரம் (பேரூராட்சி)
- வாலாஜா வட்டம் (பகுதி)
படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.
அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி).