இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 92வது தொகுதியாக இராசிபுரம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1951 டி. எம். காளியண்ணன் இந்திய தேசிய காங்கிரசு 18,553
1957 எ. இராஜா கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 20,983
1962 என். பி. செங்கோட்டுவேல் திமுக 26,846
1967 பி. பெரியசாமி திமுக 38,402
1971 மருத்துவர் இரா. நயினாமலை திமுக 41,079
1977 பி. துரைசாமி அதிமுக 33,762
1980 கே. பி. ராமலிங்கம் அதிமுக 49,779
1984 கே. பி. ராமலிங்கம் அதிமுக 51,565
1989 எ. சுப்பு திமுக 39,534
1991 கே. பழனியம்மாள் அதிமுக 75,855
1996 பி. ஆர். சுந்தரம் அதிமுக 42,294
2001 பி. ஆர். சுந்தரம் அதிமுக 67,332
2006 கே. பி. இராமசாமி திமுக 62,629
2011 ப. தனபால் அதிமுக 90,186
2016 மருத்துவர் வி. சரோஜா அதிமுக 86,901
2021 மருத்துவர் மா. மதிவேந்தன் திமுக 90,727

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,13,843 1,20,013 6 2,33,862

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

ராசிபுரம் வட்டம் (பகுதி)

பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *