வாரத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை சுத்தம் செய்வது மற்றும் ஒழுங்கமைப்பது எப்படியோ. அதேபோல், அடிக்கடி காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் ஊக்குகளைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் கோழி இறகுகளைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் சுத்தம் செய்ய இயர் பட்ஸ் பயன்படுத்துகிறார்கள். காது செருகிகளைப் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் என்பதை பற்றி பார்க்கலாம்.
காது அடைப்பு
காதில் உள்ள அழுக்குகளை அகற்ற இயர் பட்ஸ்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இயர் பட்ஸ்யை பயன்படுத்தும் போது நடுவில் உள்ள அழுக்கு உள்ளே போய் விடும். இதன் விளைவாக, அழுக்கு குவிந்து காதுகளை அடைத்துவிடும்.
காதில் உள்ள மெழுகு உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே சமயம், காது மெழுகினை அடிக்கடி எடுத்தால், அது காது வீக்கம் மற்றும் வறட்சியையும் ஏற்படுத்தும்.
காயம்
இயர் பட்ஸ்களை அடிக்கடி பயன்படுத்துவதால் காது காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனைகள் ஏற்படலாம். இது காது கேட்கும் திறனையும் பாதித்து காது கேளாத தன்மையை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவின் சுவையை உணரும் ஒரு நரம்பு காதின் நடுவில் உள்ளது. இந்த நிலையில், இயர் பட்ஸ்களைப் பயன்படுத்தும் போது இந்த நரம்பை தாக்கினால், நீங்கள் உணவை சுவைக்க முடியாது.
எனவே இயர் பட்ஸ்களை அடிக்கடி பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மேலும், காதுகளில் உள்ள அழுக்குகளை அகற்ற ஊக்கு, குச்சிகள், கேர்பின்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள், இது உங்களை சிக்கலில் மாட்டிவிடும்.
இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!