நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் இப்பழங்களை விட செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்
- பொட்டாசியம்
- மக்னீஷியம்
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- இரும்புச்சத்து
- வைட்டமின் சி
- தையமின்
- ஃபோலிக் ஆசிட்
- பீட்டா கரோட்டின்
சிறுநீரக கற்கள் வராமல் இருக்க
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், சிறுநீரக கல் வராமல் இருக்க ஆசைப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதினால், செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.
எலும்புகள் வலிமையடைய
தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் உடல் கால்சியம் சத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது அதனால் எலும்புகள் வலிமையடைகிறது.எனவே எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு
நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பலம் குறையும், இதனால் ஆண்மை குறைப்பாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை இரவு தூங்கும் போது சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நரம்புகள் பலம் பெரும். ஆண்மை குறைவு பிரச்சனை சரியாகும்.
உடல் எடை குறைய
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. ஆனால் செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட மிக குறைந்த கலோரிகளே உள்ளது.
எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர, பசி அதிக நேரம் எடுக்காமல் இருக்கும் இதனால் உடல் எடையும் குறையும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க
நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இரத்த அணுக்களின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும். இதற்கு செவ்வாழை ரொம்ப உதவியாக இருக்கிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.
உடல் ஆற்றல் பெற
உடல் என்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள் உடல் என்றும் ஆற்றலுடன் இருக்கும். அதேபோல் புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
கண் பிரச்னைகளைத் தடுக்கும்
மாலை கண் நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை பழம், ஒரு சிறந்த மருந்தாகும். எனவே பார்வை திறனில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர கண் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
செவ்வாழை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.
இதயம்
செவ்வாழைப் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது.
ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க செவ்வாழைப் பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
ஈறுகள், பற்கள்
செவ்வாழை பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
செவ்வாழை பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் சத்து பற்கள் வலுவிழப்பதை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது.
செவ்வாழை சாப்பிட உகந்த நேரம்
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம்.
உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது அனைத்து பழங்களுக்கும் பொருந்தும்.
குறிப்பு
சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு தான் இந்த செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டும்.
செவ்வாழை பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
மதிய வேளையில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவது சிறந்தது.
இரவு வேளையில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவது சிலருக்கு இருமலை உண்டாக்கலாம்.