முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்

முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்

முகப்பருக்கள் இல்லாத பொலிவான முகம் வேண்டும் என்று பெண்களும் , ஆண்களும் விரும்புவார்கள். சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளில் முகப்பருவும் ஒன்றாகும்.

பருவமடையும் பொழுது உடலில் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றம் காரணமாக முகப்பருக்கள் தோன்றுகிறது. சருமத்தில் உள்ள செபேசியஸ் என்னும் சுரப்பிகள் செபம் என்னும் எண்ணையை முகத்தில் சுரக்க வைக்கின்றன. இந்த எண்ணை சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது.

முகத்தில் படியும் தூசிகள் மற்றும் அழுக்குகள் மூலம் முகத்தில் உள்ள சரும துளைகளை அடைத்து கொள்வதால் செபம் எண்ணை வெளியேற முடியாமல் அடைத்து கொள்வதால் உள்ளே பாக்டீரியா தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் உண்டாகுகின்றது.

முகப்பரு ஏற்பட காரணம்

  • மரபணு பிரச்சனை
  • அதிகப்படியான சர்க்கரையை எடுத்து கொள்வது
  • வறுத்த மற்றும் பொறித்த உணவுகள்
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
  • மனஅழுத்தம்
  • பால் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்
  • அதிகப்படியான உப்பு சேர்த்து கொள்வது ( கடைகளில் விற்கப்படும் பாக்கெட் சிப்ஸ் , ஊறுக்காய், மற்றும் அப்பளம் போன்றவை ).

முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்

ஐஸ் கட்டி ஒத்திடம்

முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம், இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது, எலுமிச்சை முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்கிறது. முகத்தில் உள்ள அதிக எண்ணை பசையை நீக்கி தடுக்கிறது.

எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.

துளசி இலைகள்

ஒரு 10 துளசி இலைகளை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை நசுக்கி அரை கப் தண்ணீரில் பாதியாக இருக்கும் வரை கொதிக்க விடவும் பின்னர் அதை குளிர்விக்க விடுங்கள்.

முகத்தில் உள்ள பருக்களில் இந்த தண்ணீரை ஒரு சிறு பஞ்சின் மூலமாக தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி விடுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் முகப்பருக்கள் மறையும்.

கற்றாழை

கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது, கற்றாழை முகப்பருவை உணடாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். முகப்பருக்களால் முகத்தில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள் மறையும் மற்றும் வலி குறையும்.

கற்றாழை முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை நீக்குகிறது. சரும துளைகளில் அடைந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசுகளை வெளியேற்றுகிறது .

வேப்பிலை

முகப்பரு விரைவில் குணமாக வேப்ப இலைகள் மிக சிறந்தது. வேப்ப இலைகளை ஒரு பத்து எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி காய விடவும். பின்னர் முகத்தை கழுவி விடுங்கள்.

டீ ட்ரீ ஆயில்

முகப்பரு மறைய டீ ட்ரீ ஆயிலை ஒரு சில துளிகள் எடுத்து ஒரு சிறு பஞ்சில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

பப்பாளி

பப்பாளி முகப்பருக்களை நீங்க செய்வதற்க்கு ஒரு சிறந்த மருந்து. சிறு பப்பாளி துண்டுகளை எடுத்து தண்ணீர் சேர்த்து மசித்து அதனுடன் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி விடுங்கள்.

குறிப்புகள்

முகப்பருவை கையால் தொடுவது மற்றும் கிள்ளுவது கூடாது. இது முகப்பருக்களை மேலும் அதிகரிக்க செய்யும் மற்றும் தழும்புகளாக மாறக்கூடும். முகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிருங்கள்.

பாஸ்ட் பூட் ( fast food)உணவுகள் வேண்டாம் அவற்றில் எண்ணை அதிகமாக இருக்கும்.

பால் பொருட்களை குறைத்து கொள்ளுங்கள். எண்ணை அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். அப்பளம் , ஊறுகாய் போன்றவைகள் வேண்டாம் .

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் தலையணை மற்றும் முகத்தில் படக்கூடிய துணிகளை தினமும் சுத்தபடுத்தி பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *