சேலம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சேலம் மக்களவைத் தொகுதி 15வது தொகுதி ஆகும்.

தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆனால் அணை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் அணையில் 10% தண்ணீர் கூட சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. ஆனால், ஒன்றியக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மேட்டூர் காவிரி நீர் கிடைத்து வருகிறது.

பாசனத்திற்காக ஏரிகளை நம்பியிருந்தாலும், இப்பகுதியில் அரிசி, கரும்பு, வாழை, மஞ்சள் மற்றும் சிறு தானியங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. மரவள்ளிக்கிழங்கும் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. விவசாயத்திற்கு கூடுதலாக, முக்கிய தொழில்கள் ஜவுளி உற்பத்தி, வெண்பட்டு வேட்டி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு உற்பத்தி மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேகோ உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக இருக்கின்றன.

சட்டமன்ற தொகுதிகள்

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • ஓமலூர்
  • எடப்பாடி
  • சேலம் மேற்கு
  • சேலம் வடக்கு
  • சேலம் தெற்கு
  • வீரபாண்டி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

8,09,760 8,02,132 90 16,11,982
18 ஆவது

(2024)

14,56,299 14,71,524 299 29,28,122

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1952 இந்திய தேசிய காங்கிரசு எஸ். வி. ராமசாமி
1957 இந்திய தேசிய காங்கிரசு எஸ். வி. ராமசாமி
1962 இந்திய தேசிய காங்கிரசு எஸ். வி. ராமசாமி
1967 திமுக க. இராசாராம்
1971 திமுக இ. ஆர். கிருட்டிணன்
1977 அதிமுக பி. கண்ணன்
1980 திமுக சி. பழனியப்பன்
1984 இந்திய தேசிய காங்கிரசு ரங்கராஜன் குமாரமங்கலம்
1989 இந்திய தேசிய காங்கிரசு ரங்கராஜன் குமாரமங்கலம்
1991 இந்திய தேசிய காங்கிரசு ரங்கராஜன் குமாரமங்கலம்
1996 தமிழ் மாநில காங்கிரசு ஆர். தேவதாஸ்
1998 சுயேட்சை வாழப்பாடி ராமமூர்த்தி
1999 அதிமுக டி. எம். செல்வகணபதி
2004 இந்திய தேசிய காங்கிரசு கே. வி. தங்கபாலு
2009 அதிமுக செம்மலை
2014 அதிமுக பன்னீர்செல்வம்
2019 திமுக எஸ். ஆர். பார்த்திபன்
2024 திமுக டி. எம். செல்வகணபதி

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கே. வி. தங்கபாலு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு கே. வி. தங்கபாலு 4,44,591
அதிமுக ராஜசேகரன் 2,68,964

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக செம்மலை 3,80,460
இந்திய தேசிய காங்கிரசு கே. வி. தங்கபாலு 3,33,969
தேமுதிக அழகாபுரம் ஆர் மோகன்ராசு 1,20,325

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் வி. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர் பெற்ற வாக்குகள்

கூட்டணி

அதிமுக வி. பன்னீர்செல்வம் 5,56,546
திமுக செ. உமாராணி 2,88,936
தேமுதிக சுதிர் 2,01,265 பாஜக

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக எஸ். ஆர். பார்த்திபன் 6,06,302
அதிமுக சரவணன் 4,59,376
மக்கள் நீதி மய்யம் பிரபு மணிகண்டன் 58,662

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் டி. எம். செல்வகணபதி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக டி. எம். செல்வகணபதி 5,66,085
அதிமுக ப. விக்னேசு 4,95,728
பாமக அண்ணாத்துரை 1,27,139

இதையும் படிக்கலாம் : நாமக்கல் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *