பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்கையாக இருக்கும் போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள்; மகா லட்சுமியாகி சம்பத்துக்களையும்; சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறாள்.
ஆதிசக்தியே கலைமகளாகவும் அருள்கிறாள். அவளை வழிபடவேண்டிய அற்புதமான நாளையே, நவராத்திரியில் 9-ம் நாளான மகாநவமி தினத்தில் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம்.
கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியைப் பூஜை செய்து வழிபாடு செய்யும் நாளாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நம் தொழிலில் முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்களுக்கு மரியாதை கொடுத்து வழிபாடு செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை அன்று நம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதியின் படத்திற்கும், பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும்.
சரஸ்வதியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து கீழே உள்ள மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.
“சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சச்இவர்ணம் சதுர்புஜம்!
பிரசந்த் வதனம் தீயாயேத்
சர்வ விக்நோப சாந்தயே”
விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதி தேவியின் படத்திற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.சரஸ்வதி பூஜை அன்று நோட்டுப் புத்தகங்களை வைத்து வழிபாடு செய்து விட்டு மறுநாள் விஜயதசமி நாளில் எடுத்துப் படிக்கத் தொடங்குகின்றனர்.
ஆயுத பூஜை அன்று சிறிய தொழில் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து இடத்திலும் தாங்கள் உபயோகபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் தொழில் கருவிகளை சுத்தம் செய்து, அவற்றிற்கு சந்தனம், குங்கும் மற்றும் பூ வைப்பார்கள் பின் சரஸ்வதி தேவியின் படத்திற்கு முன் படைக்கப்பட வேண்டிய பொருட்கள், நெய்வைத்தியம் வைத்து விளக்கேற்றி வழிபடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலகலாவல்லி மாலை பாடலை சொல்லலாம்.
சரஸ்வதி தேவிக்குத் தாமரை, ரோஜா, தாழம்பூ உள்ளிட்ட மலர்களால் பூஜை செய்து வழிபடலாம்.
நைவேத்தியமாக அக்கார வடிசல், எலுமிச்சை சாதம், பால் சாதம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.
நவராத்திரி 9 நாட்களும் விரதமிருந்து பூஜை செய்யமுடியாதவர்கள். சரஸ்வதி பூஜை அன்று அம்மனை பூஜை செய்து வணங்கினால் அன்னையின் அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?