
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 204வது தொகுதியாக சாத்தூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | எஸ். ராமசாமி நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | காமராசர் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | காமராசர் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | எஸ். ராமசாமி நாயுடு | சுதந்திராக் கட்சி | – |
1971 | எஸ். அழகு தேவர் | பார்வார்டு பிளாக்கு | – |
1977 | கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் | அதிமுக | 38,772 |
1980 | கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் | அதிமுக | 54,720 |
1984 | கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் | அதிமுக | 58,745 |
1989 | எஸ். எஸ். கருப்பசாமி | திமுக | 52,608 |
1991 | கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் | தமுக | 59,942 |
1996 | கே. எம். விஜயகுமார் | திமுக | 58,972 |
2001 | கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் | திமுக | 57,953 |
2006 | கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் | திமுக | 73,918 |
2011 | ஆர். பி. உதயகுமார் | அதிமுக | 88,918 |
2016 | எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன் | அதிமுக | 71,513 |
2019
(இடைத்தேர்தல்) |
எம். எஸ். ஆர். இராசவர்மன் | அதிமுக | 76,977 |
2021 | ஏ. ஆர். ஆர். இரகுராமன் | மதிமுக | 74,174 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,15,416 | 1,21,999 | 61 | 2,37,476 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் (பகுதி)
கொங்களாபுரம் கிராமம்
சிவகாசி வட்டம் (பகுதி)
அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.
தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).
இராஜபாளையம் வட்டம் (பகுதி)
கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.
சாத்தூர் வட்டம் (பகுதி)
அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி,ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, ஒத்தையால் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.
சாத்தூர் (நகராட்சி) மற்றும் ஏழாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).