
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப – முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த – பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி – லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி – தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க – வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த – குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் – முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!