
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 39வது தொகுதியாக சோளிங்கர் தொகுதி உள்ளது. இத் தொகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | பி. பக்தவச்சலம் | இந்திய தேசிய காங்கிரஸ் | 22,991 |
1962 | ஏ. எம். பொன்னுரங்க முதலியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | 33,291 |
1967 | அரங்கநாதன் | திமுக | 35,225 |
1971 | ஏ. எம். பொன்னுரங்க முதலியார் | நிறுவன காங்கிரசு | 36,776 |
1977 | எசு. ஜே. இராமசாமி | அதிமுக | 25,997 |
1980 | சி. கோபால் | அதிமுக | 35,783 |
1984 | என். சண்முகம் | அதிமுக | 47,967 |
1989 | ஏ. எம். முனிரத்தினம் | இந்திய தேசிய காங்கிரஸ் | 33,419 |
1991 | ஏ. எம். முனிரத்தினம் | இந்திய தேசிய காங்கிரஸ் | 58,563 |
1996 | ஏ. எம். முனிரத்தினம் | தமாகா | 65,361 |
2001 | ஆர். வில்வநாதன் | அதிமுக | 62,576 |
2006 | அருள் அன்பரசு | இந்திய தேசிய காங்கிரஸ் | 63,502 |
2011 | பி. ஆர். மனோகர் | தேமுதிக | 69,963 |
2016 | என். ஜி. பார்த்திபன் | அதிமுக | 77,651 |
2019 | ( இடைத்தேர்தல் )
ஜி. சம்பத் |
அதிமுக | 1,03,545 |
2021 | முனிரத்தினம் | இந்திய தேசிய காங்கிரஸ் | 1,10,228 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,35,277 | 1,41,184 | 13 | 2,76,474 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வாலாஜா வட்டம் (பகுதி)
சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.
சோளிங்கர் (பேரூராட்சி)
- அரக்கோணம் வட்டம் (பகுதி)
வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.
நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)