
சிவகாசி சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 205வது தொகுதியாக சிவகாசி தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | எஸ். ராமசாமி நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | எஸ். ராமசாமி நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | அழகுதேவர் | சுதந்திராக் கட்சி | – |
1971 | கா. காளிமுத்து | திமுக | – |
1977 | கே. ராமசாமி | ஜனதா | 24,518 |
1980 | வி. பாலகிருஷ்ணன் | அதிமுக | 53,081 |
1984 | வி. பாலகிருஷ்ணன் | அதிமுக | 41,731 |
1989 | பெ. சீனிவாசன் | திமுக | 41,027 |
1991 | ஜே. பாலகங்காதரன் | அதிமுக | 84,785 |
1996 | ஆர். சொக்கர் | தமாகா | 61,322 |
2001 | அ. ராஜகோபால் | தமாகா | 65,954 |
2006 | ஆர்.ஞானதாஸ் | மதிமுக | 79,992 |
2011 | கே. டி. ராஜேந்திர பாலாஜி | அதிமுக | 86,678 |
2016 | கே. டி. ராஜேந்திர பாலாஜி | அதிமுக | 76,734 |
2021 | அசோகன் | இந்திய தேசிய காங்கிரசு | 78,947 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,16,815 | 1,22,304 | 26 | 2,39,145 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சிவகாசி வட்டம் (பகுதி)
ஈஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.
திருத்தங்கல் (நகராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).