சொரியும் முகிலை (திருத்தணிகை) – திருப்புகழ் 271 

சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் – சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் – றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் – கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் – பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் – தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் – டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் – தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *