தேவி கன்னியாகுமரி பராசக்தியே கன்னியாகுமரி
தாவி வருகுதம்மா என்நெஞ்சம் உன்தாளினை நாடுதம்மா
ஞாலமெல்லாம் ஈன்றும் கன்னியென்ற ஞாயம் உரைக்குதம்மா
ஞாயிறு திங்களெல்லாம் நின்திருஞான ஒளியின் பொறி பார்க்க வந்த என்னை
தேவி நீ பக்கத்தில் வா என்று பார்த்த பார்வையிலே என்மனம் பாகாய் உருகியதம்மா
நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக் கண்ட பின்னர்
நானாவித உலகில் என் கண்கள் நின்னையே நாடுதம்மா
பார்க்கும் இடம்தோறும் நின்முக புன்சிரிப்புள்ளதம்மா
யார்க்கினி அஞ்சவேண்டும் உலகில் எல்லாம் உனதுமயம்
தேகம் புனிதமாக தேவியே உன்னைத் தேடி அலைந்தேன்
மோகத்தை ஊட்டிவிட்டாய் இனி அகம்பாவம் துலைந்ததம்மா
கானத்தால் ஆனப்பெற்ற என் ஜீவன் கசடற்ற தாயிற்றம்மா
மரணம் எனக்கில்லை என்றே மனம் மகிழ்ந்தே குதிக்குதம்மா
துர்க்குணம் என்ற மாயா உலகை
தூயதாய் காணவைத்தாய் நிர்குணம் ஆக்கிவிட்டாய்
என்றென்றும் நீயாக இருப்பாய்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஆனந்த சக்திமயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அன்னையே அன்பு கன்னியாகுமரி.
இதையும் படிக்கலாம் : ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி பாடல்