ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 29வது தொகுதியாக திருப்பெரும்புதூர் தொகுதி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிகப்பெரிய தொழில் நகரமாகும். வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இங்கு பல தொழிற்சாலைகளை திறந்துள்ளன. ஹூண்டாய் மற்றும் நிசான் கார் ஆலைகள், செயின்ட் கோபெய்ன் கண்ணாடி தொழிற்சாலை, அப்போலோ மற்றும் எம்.ஆர்.எப். டயர் உற்பத்தி தொழில் சாலைகள் உட்பட 2500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | டி. சண்முகம் | சுயேச்சை | 14,244 |
1957 | மு. பக்தவத்சலம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 21,784 |
1962 | மு. பக்தவத்சலம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 33,825 |
1967 | டி. இராசரத்தினம் | திமுக | 41,655 |
1971 | டி. இராசரத்தினம் | திமுக | 46,617 |
1977 | என். கிருசுணன் | அதிமுக | 29,038 |
1980 | டி. யசோதா | இந்தியத் தேசிய காங்கிரசு | 37,370 |
1984 | டி. யசோதா | இந்தியத் தேசிய காங்கிரசு | 46,421 |
1989 | ஈ. கோதண்டம் | திமுக | 38,496 |
1991 | போளூர் வரதன் | இந்தியத் தேசிய காங்கிரசு | 63,656 |
1996 | ஈ. கோதண்டம் | திமுக | 71,575 |
2001 | டி. யசோதா | இந்தியத் தேசிய காங்கிரசு | 70,663 |
2006 | டி. யசோதா | இந்தியத் தேசிய காங்கிரசு | 70,066 |
2011 | ஆர். பெருமாள் | அதிமுக | 1,01,751 |
2016 | கு. பழனி | அதிமுக | 1,01,001 |
2021 | கு. செல்வப்பெருந்தகை | இந்தியத் தேசிய காங்கிரசு | 1,15,353 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,76,753 | 1,86,754 | 61 | 3,63,568 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் (பகுதி)
மாங்காடு (பேரூராட்சி), சிக்கராயபுரம் (செசன்ஸ் டவுன்), குன்றத்தூர் (பேரூராட்சி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (பேரூராட்சி).
வட்டம் பாக்கம்,கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், கோட்டுர், எலிமியான் கோட்டூர், கிளாய், ஆயக்கொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், காட்ரம்பாக்கம், தாராவூர், சிறுகளத்தூர், காவனூர், கொள்ளச்சேரி, நந்தம்பாக்கம், புதுப்பேர், நல்லூர், அமரம்பேடு, பொன்னலூர், சிறுகிளாய், பாடிச்சேரி, எட்டிகுத்திமேடு, குணரம்பாக்கம், எடையார்பக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம், கண்ணன்தாங்கல், வடமங்கலம், பிள்ளையார்பாக்கம், வெங்காடு, இரும்பேடு, சோமங்கலம், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, புதுச்சேரி, சேத்துப்பட்டு, கருணாகரச்சேரி, கொளத்தூர், நாவலூர், ஒட்டன்கரணை, கடுவஞ்சேரி, போந்தூர், இருங்குளம், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, கொடமநல்லூர், மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சந்தவேலூர், சிறுமங்காடு, ஆரனேரி, வடகால், சிறுகளத்தூர், வளத்தான்சேரி, குண்டுபெரும்பேடு, நல்லாம்பெரும்பேடு, அழகூர், மாகாண்யம், வெள்ளாரை, மலைப்பட்டு, மாகாண்யம் (ஆர்.எப்), மணிமங்கலம், வரதராஜபுரம், கரசங்கால், துண்டல்பழனி, படப்பை, சிறுமாத்தூர், சாலமங்கலம், நரியம்பாக்கம், கூளங்கசேரி, பேரிச்சம்பாக்கம், வைப்பூர், வல்லம், மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், வீட்டவீடாகை, ஜம்போடை, செல்வழிமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, காரணைதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளாரைதாங்கல், ஆரம்பாக்கம், ஆதனஞ்சேரி, கொருக்கன்தாங்கல், ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், ஒரத்தூர், நாவலூர், ஓரகடம், சென்னகுப்பம், பனையூர், எழிச்சூர், பூண்டி, வடக்குப்பட்டு, பாதர்வாடி, வளையங்கரணை, உமையாள்பரனன்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, சிறுவாஞ்சூர், வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், கீழ்கழனி, குத்தனூர், காவனூர் மற்றும் கட்டுப்பாக்கம் கிராமங்கள்.