ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி 

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 139வது தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 சிற்றம்பலம் இந்திய பொதுவுடமைக் கட்சி 25,343
1957 கே. வாசுதேவன் இந்திய தேசிய காங்கிரசு 22,756
1962 என். சுப்பிரமணியன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசு 39,101
1967 எஸ். இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 34,474
1971 ஜோதி வெங்கடாசலம் ஸ்தாபன காங்கிரசு 36,172
1977 இரா. சவுந்தரராசன் அதிமுக 26,200
1980 இரா. சவுந்தரராசன் அதிமுக 49,160
1984 இரா. சவுந்தரராசன் அதிமுக 58,861
1989 ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் ஜனதா தளம் 42,629
1991 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 82,462
1996 டி. பி. மாயவன் திமுக 73,371
2001 கே. கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 72,993
2006 மு. பரஞ்சோதி அதிமுக 89,135
2011 ஜெ. ஜெயலலிதா அதிமுக 1,05,328
2015

(இடைத் தேர்தல்)

சீ. வளர்மதி அதிமுக 1,51,561
2016 சீ. வளர்மதி அதிமுக 1,08,400
2021 மொ. பழனியாண்டி திமுக 1,13,904

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,46,117 1,56,290 40 3,02,447

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)

வார்டு எண். 1 முதல் 6 வரை.

திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு)(ராம்ஜிநகர்) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குழுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள், சிறுகமணி (பேரூராட்சி).

மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

இலுப்பூர் வட்டம் (பகுதி)

புதுக்கோட்டை மாவட்டம் கோமங்கலம் கிராமம் (கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது).

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *