
திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 203வது தொகுதியாக திருவில்லிபுத்தூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | தி. கே. ராஜா மற்றும் அ. வைகுந்தம் (இருவர்) | இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் ஏ. சின்னசாமி (இருவர்) | இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | எம். செல்லையா | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | ஆண்டி என்ற குருசாமி | திமுக | 36,732 |
1971 | ஆண்டி என்ற குருசாமி | திமுக | 41,522 |
1977 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 25,990 |
1980 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 46,882 |
1984 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 54,488 |
1989 | ஏ. தங்கம் | திமுக | 45,628 |
1991 | ரா. தாமரைக்கனி | சுயேச்சை | 38,908 |
1996 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 49,436 |
2001 | இரா. தா. இன்பத்தமிழன் | அதிமுக | 53,095 |
2006 | தி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 55,473 |
2011 | வெ. பொன்னுபாண்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 73,485 |
2016 | மு. சந்திரபிரபா | அதிமுக | 88,103 |
2021 | இ. மா. மான்ராஜ் | அதிமுக | 70,475 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,15,828 | 1,22,161 | 36 | 2,38,025 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா
(கொங்களாபுரம் கிராமம் தவிர) இராஜபாளையம் தாலுக்கா (பகுதி), ரெகுநாதபுரம் கிராமம், பி. ராமசந்திரபுரம்.