எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபடுவது அவசியம். அதேபோல், எதையும் தொடங்கும் முன் “சுக்லாம்பரதரம்” என்ற மந்திரத்தை உச்சரித்தால், விநாயகப் பெருமான் நம் எல்லா செயல்களிலும் துணையாக இருப்பார் என்று அர்த்தம்.
Contents
சுக்லாம்பரதரம்
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
பொருள்
சுக்லாம்பரதர – வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு – என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.
சசிவர்ண – நிலா போன்ற நிறம் உடையவர்.
சதுர்புஜ – நான்கு கை கொண்டவர்.
ப்ரஸந்த வதந- மலர்ந்த முகம் கொண்ட இறைவனை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.
இந்த ஐந்து வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக 5 தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாம் : விநாயகர் துதிகள் பாடல்கள்