கிரகணத்தின் தீய விளைவுவை தடுக்க சில பொருட்களை கிரகண நாளில் தானம் செய்வது சிறந்தது. சூரிய கிரகணம் அன்று 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கேற்ற எந்த பொருள்களை தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் வெல்லம், சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். இவர்கள் அனுமனை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பால், தயிர், சர்க்கரை, வெள்ளை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இதனால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பச்சை பயறு, பச்சை நிற ஆடைகள், பச்சை காய்கறிகள் போன்றவறறை தானம் செய்யலாம். இது தவிர சூரிய கிரகணம் முடிந்த பின் பசுவிற்கு தீவனம் கொடுக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திர பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பால், தயிர், வெள்ளை நிற ஆடைகள், சர்க்கரை, முத்துக்கள் போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் வெல்லம், கோதுமை, செம்பு பாத்திரங்கள், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பச்சை பயறு, பச்சை காய்கறிகள், பச்சை நிற ஆடைகள், வெண்கல பாத்திரங்கள் போன்றவற்றை தானம் செய்தால், தீய பலனைக் குறைக்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பால், தயிர், சர்க்கரை, வெள்ளை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான்.இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் வெல்லம், சிவப்பு நிற ஆடைகள், பழங்கள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் மஞ்சள் நிற பழங்கள், கடலை பருப்பு, மஞ்சள் நிற ஆடைகள், கடலை மாவு, மஞ்சள் தூள் போன்ற மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் சனி பகவானுக்கு உரிய எள்ளு விதைகள், கருப்பு நிற ஆடைகள், சீப்பு, கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் எள்ளு விதைகள், கருப்பு நிற ஆடைகள், சீப்பு, கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிற ஆடைகள், கடலை பருப்பு, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாம் : சூரிய கிரகணம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை