
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் – அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய – எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு – மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு – தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி – மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி – மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் – தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : தலைவலி மருத்தீடு (பழநி) – திருப்புகழ் 166