தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் – குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் – றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் – குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் – கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் – குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் – கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் – புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : தண்டை அணி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 62