தறையின் மானுடர் (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 305 

தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு – கொங்கையாலுந்

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம – யங்கலாமோ

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய – விந்துநாதம்

பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் – வந்துதாராய்

சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர – அம்புராசித்

திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு – றிஞ்சிவாழும்

மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக – எங்கள்மானின்

மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய – தம்பிரானே.

இதையும் படிக்கலாம் : வஞ்சக லோப மூடர் (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 306 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *