
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் – புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் – கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் – றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் – பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் – பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் – கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் – கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : திமிர உததி (பழநி) – திருப்புகழ் 168