
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் – விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு – மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் – வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் – வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள – மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை – விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் – மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : தோகைமயிலே கமல (பழநி) – திருப்புகழ் 169