பங்குனி உத்திர நாளில் “கல்யாணசுந்தர விரதம்” கடைபிடித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைப்பதோடு இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சுமங்கலிகள் பங்குனி உத்திர நாளில் கோவிலில் புதிய தாலி கட்டி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிவபெருமான் அம்பாளைக் கரம் பிடிக்கும் நாளில், பசுவின் ஆன்மாவான சிவனை தொடர்பு கொள்ள சிவ பக்தர்கள் “கல்யாண சுந்தர விரதம்” செய்கிறார்கள்.
இந்நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத் திருநாளில் ஒருவர் 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகத் தன்மையை அடைவார் என்பதும் நம்பிக்கை.
இதையும் படிக்கலாம் : திருமண வரமருளும் ஆண்டாள் ஸ்லோகம்