திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 195வது தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி உள்ளது. இத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 சின்ன கருப்பத்தேவா் இந்திய தேசிய காங்கிரசு 19,258
1962 சின்ன கருப்பத்தேவா் இந்திய தேசிய காங்கிரசு 35,491
1967 அக்கினிராசு திமுக 49,169
1971 காவேரிமணியம் திமுக 39,110
1977 கே.காளிமுத்து அதிமுக 33,850
1980 கே.காளிமுத்து அதிமுக 61,247
1984 எம்.மாரிமுத்து அதிமுக 58,559
1989 சி.ராமச்சந்திரன் திமுக 64,632
1991 எஸ்.ஆண்டித்தேவா் அதிமுக 83,180
1996 சி.ராமச்சந்திரன் திமுக 99,379
2001 எஸ்.எம்.சீனிவேல் அதிமுக 83,167
2006 ஏ.கே.போஸ் அதிமுக 1,17,306
2011 ஏ.கே.டி.ராஜா தேமுதிக 95,469
2016 எஸ்.எம்.சீனிவேல் அதிமுக 93,453
2016 (இடைத்தோ்தல்) மருத்துவா் பா.சரவணன் திமுக 85,434
2021 ராஜன் செல்லப்பா அதிமுக 1,03,683

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,54,421 1,59,133 34 3,13,588

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மதுரை (தெற்கு) வட்டம் (பகுதி)

விளாச்சேரி, நாகமலைபுதுக்கோட்டை, வடிவேல்கரை, தட்டானூர், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலையூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயில், பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்.

சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி), திருநகர் (பேரூராட்சி).

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *