திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 33வது தொகுதியாக திருப்போரூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 இந்திய தேசிய காங்கிரசு ராமசந்திரன்
1957 திமுக முனுஆதி

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 முனுஆதி திமுக
1977 சொக்கலிங்கம் திமுக
1980 சொக்கலிங்கம் திமுக
1984 தமிழ்மணி அதிமுக
1989 டாக்டர் திருமூர்த்தி திமுக
1991 தனபால் அதிமுக
1996 சொக்கலிங்கம் திமுக
2001 ச. கனிதா சம்பத் அதிமுக
2006 மூர்த்தி பாமக
2011 கே, மனோகரன் அதிமுக 84,169
2016 மு. கோதண்டபாணி அதிமுக 70,215
2019 (இடைத்தேர்தல்)

எஸ். ஆர். எஸ். இதயவர்மன்

திமுக 1,03,248
2021 எஸ்.எஸ்.பாலாஜி விசிக 93,954

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,45,925 1,52,057 51 2,98,033

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,

திருப்போரூர் (பேரூராட்சி)

  • திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)

நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,

திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி).

1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

செய்யூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *