உடல் நலம் தரும் திருப்புகழ்..!

திருப்புகழ் 243 இருமலு ரோக (திருத்தணிகை)

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி – விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை – யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு – முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் – அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக – இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை – விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் – மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு – பெருமாளே.

thiruppugazh for health

திருப்புகழ் 790 ஈளை சுரங்குளிர் (பாகை)

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற – இளையாதே

ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி – ரிழவாதே

மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல் – முழுகாதே

மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி – மொழிவாயே

வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திட – வலைபீறா

வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள – மதிதோயும்

பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல் – கழிபாயும்

பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பிய – பெருமாளே.

திருப்புகழ் 1027 தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்)

தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு – மதநீர்தோய்

சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட – மவைதீரா

வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்று – மணுகாதே

வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து – அருள்வாயே

காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி – மணவாளா

காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை – மயில்வீரா

வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு – முருகோனே

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : திருமண திருப்புகழ் பாடல் வரிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *