திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 142வது தொகுதியாக திருவெறும்பூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
|
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
| 1967 | வி. சுவாமிநாதன் | இந்திய தேசிய காங்கிரசு | 33,513 |
| 1971 | கு. காமாட்சி | திமுக | 43,233 |
| 1977 | கே. எசு. முருகேசன் | அதிமுக | 24,594 |
| 1980 | குருசாமி என்கிற அண்ணாதாசன் | அதிமுக | 51,012 |
| 1984 | குருசாமி என்கிற அண்ணாதாசன் | அதிமுக | 47,900 |
| 1989 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 54,814 |
| 1991 | டி. இரத்தினவேல் | அதிமுக | 69,596 |
| 1996 | கே. துரை | திமுக | 78,692 |
| 2001 | கே. என். சேகரன் | திமுக | 61,254 |
| 2006 | கே. என். சேகரன் | திமுக | 95,687 |
| 2011 | சி. செந்தில்குமார் | தேமுதிக | 71,356 |
| 2016 | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திமுக | 85,950 |
| 2021 | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திமுக | 105,424 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,42,342 | 1,48,608 | 63 | 2,91,013 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)
பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள்.
பாப்பாக்குறிச்சி (சென்சஸ் டவுன்), திருவெறும்பூர் (பேரூராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம் (சென்சஸ் டவுன்), துவாக்குடி (பேரூராட்சி), நவல்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பழங்கணங்குடி (சென்சஸ் டவுன்).
திருச்சிராப்பள்ளி வட்டம் (பகுதி)
திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண் 7, 27 முதல் 32 வரை மற்றும் 36.